Monday 5 October 2015

வான் புகழ் கொண்ட வலைப் பதிவர்


  
   வலைப் பூ, வலைத்தளம், வலைப் பதிவர், மின் தமிழ், இணையத் தமிழ் போன்ற சொற்றொடர்கள் தமிழின் வரவுக் கணக்கில் வைக்கத்தக்கத் தகுதியைப் பெற்றுவிட்டன. வலைப் பதிவர் என்பதில் செருக்கும் மிடுக்கும் கொள்ளத் தொடங்கிவிட்டோம். ஒரு புதிய அங்கீகாரம் நமக்குக் கிடைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. வண்டமிழ் இலக்கிய வரலாற்றில் இனி வலைப் பூக்கள் தோற்றமும் வளர்ச்சியும் என்ற புதிய பகுதியைச் சேர்க்க வேண்டிய காலம் வந்து விட்டது.

   இவற்றுக்கெல்லாம் அடிப்படையான காரணங்கள் பல. நடந்து முடிந்த வலைப் பதிவர் சந்திப்புகள் சிதறிக் கிடந்த வலைப் பதிவர்கள் என்னும் முத்துகளை ஒன்று திரட்டி மாலையாக்க எடுத்த முயற்சிகள் குறிப்பிடத் தகுந்தவை..

  வலைப்பதிவர் சந்திப்புகள் வரிசையில் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள நான்காவது வலைப் பதிவர் சந்திப்பு தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிகழ்வுக்கென உருவாக்கப்பட்ட வலைத்தளம் எல்லா விவரங்களையும் நிரல்பட வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 புதுகை வலைப் பதிவர் சந்திப்பின் போது  வெளியிடப்படவுள்ள வலைப் பதிவர் கையேடு ஒருவர் மற்றவருடைய வலைப் பூ வாசத்தை முகர்ந்து மகிழ வழிவகுக்கும்.

 வலைப் பதிவர்களுக்கு வழங்கப்படவுள்ள விருதுகளும், பரிசுகளும், பாராட்டுகளும் வருங்காலத்தில் அவர்கள் சமுதாயப் பயன்மிகுந்த படைப்புகளைப் படைப்பதற்கு உதவிடும் என்பதில் ஐயமில்லை.

  உரியவர்களை அணுகி, மிகுந்த நிதியம் பெற்று, மின் தமிழ் இலக்கியப் போட்டிகளை  நடத்திட ஆவன செய்தமை அருமையிலும் அருமை. இது ஓர் இமாலய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். 260 படைப்புகள் வந்து குவிந்திருப்பதைக் கண்டு பலரும் தம் மூக்கின்மேல் வைத்த விரலை இன்னும் எடுக்கவில்லை., அந்தப் பலருள் அடியேனும் ஒருவன்.

   வண்ண அழைப்பிதழை வலைத்தளத்தில் கண்டவர் எல்லாம் இப்போது வண்ணக் கனவு காணத் தொடங்கிவிட்டார்கள். செவி நுகர் கனிகளை மாந்தி மகிழப்போகும் அந்த நாள் நாளையே வராதா என ஏங்கித் தவிக்கிறார்கள்.  

   இது வலைப் பதிவர் சந்திப்பல்ல; வலைப் பதிவர் மாநாடு; வரலாறு படைக்கப் போகும் மாநாடு.

  அல்லும் பகலும் அயராது உழைக்கும் மாநாட்டுக் குழுவினருக்கு மனமார்ந்தப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 படை எழுந்ததோ எனும்படியாய் புதுக்கோட்டையை நோக்கிப் புறப்படுவோம்; வாரீர்.

 மனமிருந்தால் போதும்; புதுகை செல்ல வழி கிடைக்கும்.



5 comments:

  1. ஐயா தாங்கள் புதுகைக்கு வருகிறீர்கள்தானே
    புதுகையில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
    நன்றி

    ReplyDelete
  2. வணக்கம்...

    தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

    இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  3. இனிய நண்பர் அவர்களே !
    நல்ல தகவல் தந்துள்ளீர்கள். தமிழ் வாழ இதுவும் ஒரு வழி. தா ங்கள் பரவ கால் வைப்பது நன்றாகவேயுள்ளது.. வாழ்க

    ReplyDelete